கல்தோன்றி மன்தோன்றாக்காலாத்தில் தோன்றிய ழூத்தகுடி தமிழ்குடி என்பதில் மாற்று கருத்து இருக்காலாகாது அப்போதே தமிழன் தனக்காக தன்னைப்பாதுகாக்கவும் காப்பாற்றவும் தோன்றிவித்த கலையே வர்மக்கலை அதாவது வர்ம மருத்துவமுறை என்பதே உண்மை. இதை தமிழ் இலக்கியத்தில் படைத்ததும் குறிப்பிடத்தக்கதுதன்று வர்மகலையை.

“பட்டுவிமும் பாதகர்க்கு பகரொன்னாதே என்றும்”

பக்தருக்குப் பகர்ந்துவிடும் பகரக்கேளே

என்னும் கூற்றில் இருந்து முன்கோபிகளுக்கும் அதர்மிகளுக்கும் இந்த ஆபத்தான கலையை கற்று கொடுக்கக்கூடாது என்றும் இறைநெறி நல்லொமுக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே கற்று தரவேண்டும் என்று சுட்டிகாட்டியுள்ளனர்

“இகத்திளுள்ள வம்பருக்கீந்தாயானால்”

சாவதுதான் கடைநரகிலாவாய்ச் சொன்னேன்!”

என்று போதித்தனர் அதாவது ஒரு மாணவன் வர்மகலையை தவறாய்ப் பயன்படுத்தினால் தன்டணை அவனுக்கல்ல அவனுடைய ஆசானுக்கே அதுவும் நரகத்தில் கடைசி நகரமாம்; ஆகவே நல்ல மானாக்கனை தேடும் நிலையிருந்தது கற்பதற்க்கு ஆர்வம் இருந்தும் பலர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.நாளடைவில் மாணவரும் கற்கமுன்வரவில்லை மேலும் இக்கலை அறிந்த ஆசான்கள் பலர் தன் குடும்ப சொத்தாக பாவித்து தன் குடும்பத்தினருக்கு மட்டும் கற்று தந்தனர் மேலும் சிலர் இந்த வர்ம நுனுக்கங்கலை மர்மம் என்று மறைத்து வைத்தனர் சிலர் இக்கலையை தன்னுடனேயே வைத்து அழித்தும் கொண்டனர்:அப்படிபட்ட இந்த அரிய கலையினை எங்களின் குருவான மகான் தட்சனாமுர்த்தி சுவாமிகளின் அருளால் மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் இருக்கின்றோம் அதர்க்கான பயிற்சிகளை கற்று வர்ம மருத்துவம் செய்து வருகின்றோம்

வர்ம ஆசான்கள் என்று பார்த்தோமானால் வர்மம் ஈஸ்வரனிடம் இருந்து நந்தி தேவருக்கும் நந்தி தேவரிடமிருந்து இருந்து அகத்தியர் மற்றும் தீருமூலருக்கும் உபதேசிக்கப்பட்டது என்றும் திருமூலரிடம் இருந்து காலங்கியார், போகர், புலிப்பானி, ராமதேவர் மூலமாக எனைய குருமார்களுக்கு போதிக்கபட்டது என்று தெரியவருகின்றது பிற்காலத்தில் வர்ம நூல்கள் நிறைய இவர்களின் வழிவந்த சிடர்களாள் எமுதப்பட்டு இன்றும் சில பிரதிகள் நம் புழக்கத்தில் உள்ளது.

வர்மம் மூன்று நிலைகலை கொண்டது

 • காற்று
 • வாசி
 • ஆற்றல் 3 வர்மம்

இவை மூன்று நிலைகளில் செயல்படுகிறது

 • ஸ்தூல ஆற்றல்
 • சூக்கும ஆற்றல்
 • காரண ஆற்றல்.

1. ஸ்தூல ஆற்றல்: வெளியே தெரிகின்ற பருஉடம்போடு தொடர்புடைய ஆற்றல்.

2. சூக்கும ஆற்றல்: பருஉடம்பிற்க்குள் மறைந்திருக்கும் ஆற்றல்.

3. காரண ஆற்றல்: பருஉடம்பையும் நுண் உடம்பையும் இனைக்கும் ஆற்றல்.

வர்மத்திர்கு பல பெயர்கள் உண்டு

 • வர்மம்
 • காலம்
 • சுவாசம்
 • பிராணன்
 • கலை
 • சரம்
 • யோகம்
 • புரவி
 • சிவம்
 • வாசி இப்படி பல பெயர்களில் உண்டு

1. வர்மம்: ஒரு இடத்தில் நின்று செயல்படுவது.

2. காலம்: சிறு அசைவோடு இருப்பது.

3. சுவாசம்: மூக்குப்பாதையில் அமைந்து இருப்பது.

4. பிராணன்: நுரையீரல் இருதயம் இருக்கும் இடத்தில் இருப்பது இதுதான். வெளி காற்றை உயிர் சக்தியாக மாற்றுவது அதாவது(அபாணன்) இதர்கு ஆக்ஸிஜன் என்று கூறுவர் ஆனால் வர்மநூல் அபாணன் என்று தான் கூறுகிறது உயிர்சக்தி என்பது இந்த இடத்தில் தான் மாறுகிறது.

5. கலை: இடகலை இடது மூச்சு.பிங்கலை வலது மூச்சு காற்று.

6. சரம்: ழூலையில் இருந்து உடல் முழுவதும் பரவுகின்ற நரம்பு மண்டலம்.

7. யோகம்: ஒரு வர்மத்தை இன்னொரு வர்மத்தோடு இணைப்பது.

8. புரவி: மிக வேகமாக உடல் முழுவதும் சுழற்சியில் இருக்கின்ற ஆற்றல்.

9. சிவம்: ழூலையின் இருந்து செயல்படும் ஆற்றல்.

10. வாசி: கருவில் உருவாகும் போது வரும் சக்தி இதுதான் அர்தநாரிசக்தி இது தாய் தந்தையின் கூட்டுசக்தி.

வர்மம் பலவகைகன் உண்டு அவை

 • தொடுவர்மம்
 • படுவர்மம்
 • தட்டுவர்மம்
 • இனைவர்மம்
 • பக்கவர்மம்
 • நாள்வர்மம்
 • எல்லிடைவர்மம்
 • ஊதுவர்மம்
 • நக்குவர்மம்
 • நோக்குவர்மம்
 • கிரகவர்மம்
 • பட்சிவர்மம்
 • வாதவர்மம்
 • பித்தவர்மம்
 • சிலேத்துமவர்மம் என பலவகையுன்டு.

நம் உடலில் சுமார் 8000 வர்ம புள்ளிகள் உள்ளன.அவற்றில் சில மட்டும் தற்போது நோய்தீர்க மட்டும் போதிக்க இருக்கின்றோம்.

அய்யாவின் ஆசியோடு குருவடிசரணம் திருவசரணம்.

எட்டான கலையுடனே பிராணன் நாலும்

ஏகினதால் ஈராறு தலங்களென்னக்

கட்டான ஈராறு வழியெட்டாக்கி

கருதினதால் தொடுவர்மம் தொன்றுற்றாறும்

நெட்டவே இவை எல்லாம் நூற்றெட்டாக்கி

நேர்ந்ததினால் நூற்றெட்டு வர்மமாகும்

வட்டுறவே யிவை யெல்லாம் மறிந்து தேர்ந்து

வகை விவரம் திட்டமுடனறிந்து செய்யே

வர்ம ஒடிவு முறிவு சாரிசூத்திரம்–16

வர்மமும் (ஒ)யோகமும் மருத்துவம்

இந்த பாரத தேசத்திற்கு மருத்துவத்திற்கு இணையான மருத்துவம். வேறு எங்கும் இருந்ததில்லை. சித்தர் வாழ்ந்த காலத்தில் இன்று நாம் எதைஎதையோ மருத்துவம் என்று நினைத்து நம் உடலை வருத்திக்கொள்வதோடு பணவிரைத்தால் மனவருத்தத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். நமது தேச மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், வர்மம், யோகம், இப்படி இந்த மருத்துவங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்ததுதான் அதிலே (ஒ)யோகமும், வர்மமும் பற்றி இங்கே காண்போம். இந்த மருத்துவம் ஆறு நிலைகளில் செயல்புரிகின்றன. இவைகளாவன.

 1. ஆதாரங்களின் செயல்பாடுகள்
 2. ஆதாரங்களும் பஞ்சபூதங்களும்
 3. ஆதார மருத்துவ நுட்பங்களும்
 4. ஆதாரங்களும் தூண்டும் முறைகளும்
 5. வர்ம-வாசி யோகதியானம்
 6. ஆதார அட்சர இதழ்களில் வர்ம காயவியல்

ஆ + தாரம் = ஆதாரம். “ஆ” என்றால் பசு அல்லது உயிர் (சீவான்மா). “தாரம்” என்றால் தாங்கி நிற்றல். அதாவது உயிரைத் தாங்கி நிற்கும் இடங்களே ஆதாரங்களாகும்.

உடலுக்கு ஆதாரம் முதுகெலும்புத் தொடர். அதுபோல மனம் மற்றும் உடல் தொடர்பான இயல்பு மற்றும் நோய் நிலைகளுக்கு ஆதாரம் அம்முதுகெலும்புத் தொடரில் கீழிருந்து மேலாக அணிவகுத்து நிற்கும் ஆதாரங்கள். இவற்றை ஆறாக வைகப்படுத்துகிறது சித்த மருத்துவ உடல் தத்துவம். தத்துவங்கள் 96-ஆதாரங்களை ஆறு என்று கணித்தாலும் “சகஸ்ராரம்” என்ற தலை உச்சியிலுள்ள ஓர் ஆதாரத்தையும் சேர்த்து ஏழாகவே நூற்கள் கூறுகின்றன.

ஆதாரங்கள் வட்டமாக இருப்பதாலும் அவைகளில் நாடிகள் ஓடுவதாலும், இயங்கும் தன்மை உடைய இவற்றை வடநூல்கள் “சக்கரங்கள்” என்று குறிப்பிடுகின்றன. இவற்றில் செயல்படும் பிராணசக்தியை மையப்படுத்தி செய்யப்படும் மருத்துவம் தற்போது பிராண சிகிக்சை (pranic healing) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆதாரங்களை மனிதக்கண்களால் காண இயலாது. இவை பிராண மற்றும் மனோசக்தி (psychic energy) மையங்களாக உள்ளன. இவைகள் வெவ்வேறு அதிர்வெண்களில் (vibrational -frequencies) அதிர்வனவாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்குமான குறிப்பிட்ட எழுத்துக்களை உச்சரிக்கும் போது அவை அதிர்வடைந்து அந்தந்த ஆதாரங்களில் செயல்பாடுகள் தூண்டப்படுகிறது.

ஆதாரங்களின் செயல்பாடுகள்

“உற்பனமாம் நாடி மூன்றும் குருநாடியாகும்.

உறப்பாக கண்டவனே பண்டிதன் தான்

ஊடுருவல் போலே பாய்ந்த நரம்பிதாமே

உத்தமனே அசைந்தோடி ஆடிநிற்கும்

அறிவான ஆதாரம் ஆறும் சுற்றி

அக மிருந்து வாதம் பித்தம் சிலேற்பம்காட்டும்”

(உற்பத்தி நரம்பறை – 130 / 1000)

தசநாடிகளில் குருநாடி எனப் போற்றப்படும் இடகலை, பிங்கலை, கழுமுனை ஆகிய நாடிகள் மூன்றும் ஆறு ஆதாரங்களைச் சுற்றி ஓடுகின்றன. இதில் வாசி எனும் பிராணசக்தி (பிராணன், அபானன், சமானன். வியானன். உதானன்) ஊடுருவி பாய்ந்தோடுகின்றது. இதனால் ஆதாரங்களில் மையங்கொண்டிருக்கும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களும் சேர்க்கையாகி வாத, பித்த, கபம் (சிலேற்பமம்) என்ற முக்குற்றம் இயக்கப்படுகிறது. இம்முக்குற்ற மாறுபாடுகள் நோய்க்கும் சிசிக்சைக்கும், சுகத்துக்கும் காரணமாக அமைகின்றன.

இடகலை + அபானன் வாதம, ஆகாயம் (ஆக்கினை), வாயு (விசுத்தி)

பிங்கலை + பிராணன் பித்தம், தேயு (அனாகதம்)

சுழுமுனை + சமானம் கபம், அப்பு (மணிபூரம்)

பிருதிவி (சுவாதிட்டானம்)

ஆதாரங்களும் பஞ்ச பூதங்களும்

ஆதாரங்கள் மூலாதாரத்தில் தொடங்கி ஆக்கினையில் முடிவடைகின்றன. மூலாதாரம் குண்டலினி சக்தியின் இருப்பிடம். இதில் ஐந்து பூதங்களும் ஒடுங்கி விரியும். இதற்கு மேலுள்ள சுவாதிட்டானத்தில் பிருதிவியும், மணிப்பூரகத்தில் அப்புவும், அனாகதத்தில் தேயுவும், விசுத்தியில் வாயுவும், ஆக்கினையில் ஆகாயமுமாக விளங்குகின்றன. அதாவது இவை ஸ்துலாமாய் ஆரம்பித்து மேலே செல்ல செல்ல சூக்குமமாய் முடிவடைகின்றன. திடத்தன்மையுடைய எலும்பு, தசை, தோல், நரம்பு, மயிர் போன்ற உடல் உறுப்புகளுக்குக் காரணமான பிருதிவி பூதக்கூறுகள் சுவாதிட்டானத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன. திரவத்தன்மையுடைய சிறுநீர், உமிழ்நீர், வியர்வை, இரத்தம் சுக்கிலம் போன்ற உடல் உறுப்புகளுக்குக் காரணமான அப்பு பூதக் கூறுகள் மணிப்பூரகததை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

வெப்ப தன்மையுடைய தூக்கம், பசி, தாகம், சோம்பல், சேர்க்கை போன்ற உடல் செயல்களுக்குக் காரணமான தேயு பூதக்கூறுகள் அனாகத்தை ஆதாரமாக கொண்டுள்ளன.

வாயுத்தன்மையுடைய ஓடல், படுத்தல், நடத்தல், உட்காருதல், தாண்டல் போன்ற உடல் செயலியலுக்கு காரணமான வாயு பூதக்கூறுகள் விசுத்தியை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

மனம் தொடர்புடைய மோகம், இராகம், துவேசம், பயம், நாணம் போன்ற உணர்வுகளுக்குக் காரணமாக ஆகாய பூதக்கூறுகள் ஆக்கினையை ஆதாரமாக் கொண்டுள்ளன.

இதற்கு மேலுள்ள “சகஸ்ராரம்” என்ற ஆதாரம் யோகம் மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது.

எண் ஆதாரங்கள் பஞ்ச பூதங்கள் உடல் & உடலியக்கம்
1 மூலாதாரம் பஞ்ச பூதங்கள் குண்டலினி சக்தி
2 சுவாதிட்டானம் பிருதிவி எலும்பு, தசைதோல், நரம்பு, மயிர்
3 மணிப் பூரகம் அப்பு சிறுநீர்,உமிழ்நீர்,வியர்வை, இரத்தம், சுக்கிலம்
4 அனாகதம் தேயு தூக்கம்,பசி,தாகம், சோம்பல்,சேர்க்கை
5 விசுத்தி வாயு ஓடல், படுத்தல், நடத்தல், உட்காருதல், தாண்டல்
6 ஆக்கினை ஆகாயம் மோகம், இராகம், துவேசம், பயம்,நாணம்

ஆதார மருத்துவ நுட்பங்கள்

நோய்கள் முதலில் ஆதாரங்களை பாதிப்படையச் செய்து பின்பு நாடிகளை பாதிப்படையச் செய்கிறது. நாடிகள் பாதிப்படைவதைத் தொடர்ந்து மத்திய நரம்பு மண்டலும் (CNS) தொடர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் பாதிப்படையகின்றன.

பாதிப்படைந்த உறுப்புக்களோடு அல்லது மண்டலத்தோடு தொடர்புடைய ஆதாரத்தை கண்டறிந்து அவற்றுக்கு தகுந்தவாறு மருத்துவம் செய்ய வேண்டும். உதாரணமாக கல்லீரல் நோய்களாக இருந்தால் மணிப்பூராக ஆதாரமும், நுரையீரல் நோய்களாக இருந்தால் விசுத்தி ஆதாரமும் பாதிப்படைந்திருக்கும். எனவே இந்நோய்களுக்கு அதோடு தொடர்புடைய ஆதாரத்தை தூண்டியோ அல்லது சாந்தப்படுத்தியோ தேவைக்கேற்ப மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

நோய்கள் ஆதாரங்களின் குறைசெயல்பாட்டால் (HYPOFUNCTION) வந்ததா அல்லது மிகு செயல்பாட்டால் (HYPERFUNCTION) வந்ததா என்று கண்டறிந்து அதற்கு தகுந்தாவாறு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

குறை செயல்பாட்டுக்கு தூண்டல் (STIMULATION) சிகிச்சையும், மிகு செயல்பாட்டுக்கு சாந்த சிகிச்சையும் (CLAM IT DOWN) மேற்கொள்ள வேண்டும்.

தூண்டல் சிகிச்சை நேரிடையாக அந்தந்த ஆதாரங்களைத் தூண்டி செய்யலாம். ஆனால் சாந்தசிகிச்சையை குறிப்பிட்ட அந்த ஆதாரத்தைக் கட்டுப்படுத்தும் உயர் ஆதாரங்களைத் தூண்டியே செய்ய வேண்டும்.

ஆதார மருத்துவ முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம் அவை : 1. ஆதாரத்தூண்டல் முறை 2. ஆதார சாந்த முறை

1. ஆதாரத்தூண்டல் முறை

ஆதாரங்களின் குறை செயல்பாட்டை சரி செய்ய தூண்டல் முறை பயன்படுகிறன்றது. ஓர் ஆதாரத்தை திறப்பதற்கு அல்லது தூண்டுவதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. அவை:

வர்ம தூண்டல் முறை

1. வர்ம புள்ளிகளைத் தொட்டு தூண்டும் முறை

2. வர்ம – வாசி யோக தியானத்தினால் தூண்டும் முறை

3. யோகாசனப் பயிற்சிகள்

4. பிராண சக்தியால் தொடாமல் தூண்டும் முறை

1. வர்ம புள்ளிகளைத் தொட்டு தூண்டும் முறை:

ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் அதற்கென குறிப்பிட்ட வர்ம புள்ளிகள் உண்டு. இப்புள்ளிகளை விரல்களின் மூலம் அழுத்தி தடவி தூண்டுவதன் மூலம் அந்த ஆதாரத்தை திறக்வோ அல்லது தூண்டவோ செய்யலாம்.

“ஓமென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே

உண்டப்பா நூற்றெட்டு வர்மம் தானே”

(வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200)

“தானென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே

தலமறிந்து பார்ப்பதற்கு தவங்கள்வேணும்”

(வர்ம குருநாடி-32)

ஆறு ஆதாரங்களில் மொத்தம் 108 வர்மங்கள் உண்டென “வர்ம ஒடிவு முறிவு சர சூத்திரம் – 1200” என்ற நூல் குறிப்பிடுகின்றது. அவ்வர்மங்களாவன :

1 மூலாதார வர்மங்கள் 3
2 சுவாதிட்டான வர்மங்கள் 7
3 மணிப்பூரக வர்மங்கள் 10
4 அனாகத வர்மங்கள் 41
5 விசுத்தி வர்மங்கள் 15
6 ஆக்கினை வர்மங்கள் 32
மொத்தம் வர்மங்கள் 108

2. ஆதார சாந்த முறை :

ஆதாரங்களின் மிகு செயல்பாட்டை சீர்செய்ய சாந்த மருத்துவமுறை பயன்படுகிறது. ஒரு ஆதாரத்தின் மிகு செயல்பாட்டை கட்டுப்படுத்த அதற்கு மேலான ஆதாரத்தை சக்தியூட்ட வேண்டும். ஒவ்வொரு ஆதாரமும் மற்றொரு ஆதாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அனாகத ஆதாரம் மணிப்பூரகத்தைக் கட்டுப்படுத்தும். விசுத்தி ஆதாரம் சுவாதிட்டானத்தைக் கட்டுப்படுத்தும். ஆக்கினை ஆதாரம் அனாகத்தையும் விசுத்தியையும் கட்டுப்படுத்தும். “சகஸ்ராரம்” ஆக்கினைûயும் மூலாதாரத்தையும் கட்டுப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் ஆதாரங்கள் கட்டுப்படும் ஆதாரங்கள்
அனாகதம் மணிப்பூரகம்
விசுத்தி சுவாதிட்டானம்
ஆக்கினை ஆனாதகம் & விசுத்தி
சகஸ்ராசம் ஆக்கினை & மூலாதாரம்

உதாரணமாக சுவாதிட்டான ஆதாரம் மிகு செயல்பாட்டுடன் இருந்தால் அதைக் கட்டுப்படுத்த விசுத்தி ஆதாரத்தை தூண்டி சக்தியூட்ட வேண்டும். இதனால் விசுத்தி ஆதாரம் தூண்டப்பட்டு அது வன்மையடைந்து தனக்கு கீழுள்ள சுவாதிட்டான ஆதாரத்தை கட்டுப்படுத்தி அதன் மிகு செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால் சுவாதிட்டான ஆதாரம் சாந்தப்படுத்தப்படுகிறது.

ஆதாரங்களும் தூண்டும் முறைகளும்

1. மூலாதாரம்

தானான மூலாதார கீழ் முனைக்குள்

தயவான குத குய்யத்தானந்தன்னில்

பானமுறும் அசோக வனவர்ணமாக

பகர்ந்த சக்தி குண்டெலியின் கீழ் பக்கத்தில்

ஆனமதிலே பரிவளையம் அடுக்காறாக

அருணோதயம் தனில் விரிந்த கமலம் போலே

ஏனமுறும் அபான வாய்வு அதிலே உற்று

இனியதொரு மூங்கில் வட்டத்தடையாளம் காணே.

(100 வர்மலாட சூத்திரம் 300)

மூலாதாரம்

இது குதத்துக்கும் குய்யத்துக்கும் நடுவில் (PERINEUM) உள்ளது. இது SACRO COCYGEAL NERE PLEXUS – உடன் தொடர்புடையதாக கொள்ளப்படுகிறது. இது நான்கு இதழ் மலர் போன்றும் நடுவில் முக்கோணம் போன்றும் உள்ளது. இதில் குண்டலினி சக்தி உள்ளது. இதில் ஓங்காரம் இருக்கும். இதுவே எல்லா ஆதாரங்களுக்கும் மூலமாக உள்ளது. இதில் ஐம்பூதங்களும் ஒடுங்கி விரியும்.

இது அட்ரீனல் சுரப்பியோடும், உடல் உறுப்புகளின் கால், பாதம், பெருங்குடல், என்புகள், பற்களோடும் தொடர்புடையது.

மூதாரத்தின் செயல்பாட்டுக் குறைவால் (MELFUNCTION) எடை பிரச்சனைகள், மூல வியாதிகள், மலச்சிக்கல், கால் வலி (SCIATICA) மூட்டு தேய்வுகள் (DEGENERATIVE ARTHRITES) மூட்டு கோளாறுகள் (KNEE TROUBLES) போன்ற நோய்கள் தோன்றலாம்.

மூலாதாரத்தை தூண்டுதல்:

மூலாதாரத்தை தூண்டுவதன் மூலம் மூலாதாரத்திலிருந்து சக்தியை (ENERGY) வெளிப்படுத்தி மூலாதார செயல்பாட்டுகுறை நோய்களை குணப்படுத்தலாம்.

1. மூலாதார வர்ம தூண்டல் முறை :

விரல்களால் தூண்டும் முறை

மூலாதார வர்மங்கள் மூன்றாகும். அவையாவன

கண்கலங்கி வர்மம் 1
வித்(ந்)து வர்மம் / அண்டவர்மம்
தண்டு வர்மம் 1

மேற்கண்ட மூலாதார வர்மபுள்ளிகளை தூண்டி மூலாதாரத்தையும் தடவுவதன் மூலம் மூலாதாரத்தைத் தூண்டலாம். இதனால் பஞ்சபூதங்களும் சமப்படுத்தப்படுகின்றன. குண்டலினி சக்தி தூண்டப்படுகிறது. இதனால் மூலாதாரக் குறைபாடு நோய்களை களையலாம்.

வர்ம – வாசி யோக தியானத்தினால் தூண்டும் முறை:

“விதமான மூலத்தில் வங்கென்றோதி

ஓமேதான் வாசியை நீ மறவாமலேற்றி

ஒதியுள்ள மூலத்தடியில் தானும்”

(வர்ம கண்ணாடி – 500)

வாசி யோக தியானத்தின் போது உணர்வை மூலாதாரம் மற்றுமதன் வர்மங்களில் நிறுத்தி வங்… என்று ஓதி வாசி எனும் பிராணனை அத்தலங்களில் ஏற்றி பயிற்சிக்க வேண்டும். இதனால் மூலாதாரம் தூண்டப்பெறும். மேலும் மூலாதார ஒலியான “ஓம்” எனும் எழுத்தை உச்சரிப்பதன் மூலமும் மூலாதரத்தை தூண்டலாம்.

2. யோகாசனப் பயிற்சிகள் :

கீழ்கண்ட யோகாசனப் பயிற்சிகள் மூலாதாரத்தைத் தூண்ட பயன்படுகிறது.

 1. பவன முக்தாசனம்
 2. சலபாசனம்
 3. பச்சி மோத்தாசனம்
 4. பாத ஹஸ்தாசனம்
 5. சக்ராசனம்
 6. கோரக்சானம்
 7. உக்கடாசனம்

3. பிராண சக்தியால் தொடாமல் தூண்டும் முறை :

பிராண சிகிச்சை (டழ்ஹய்ண்ஸ்ரீ ஏங்ஹப்ண்ய்ஞ்) மருத்துவரால் இது செய்யப்படுகிறது.

2.சுவாதிட்டானம்

அடையாளம் உரைத்த மூலவட்டத்தின் மேல்

அச்சுதனுமிருக்குமந்த பிறை கீழாக

கலைமளோடணைய நிற்கும் கமலந்தன்னில்

கடிய நால் வட்டமடா சுவாதிட்டானம்

துடியாக பவிழ நிறவர்ணமாக

தொல்லுலகில் கம்பம் கால் வசங்கள் சுற்றி

கடிய அலகை திருபதினாறு வீதி

காணவே பஞ்சமியில் பிறை போலாமே.

(101 வர்மலாட சூத்திரம் 300)

சுவாதிட்டானம்

இது இனக்குறியின் மூட்டில் மூலாதாரத்திலிருந்து நான்கு விரலளவுக்கு மேலே உள்ளது. இது LUMBOSACRAL NERVE PLEXUS உடன் தொடர்புடையதாகக் கொள்ளப்படுகிறது. இது ஆறு இதழையுடையதாகும் மலர் போன்றும் அதன் நடுவே நாற்சதுரவடிவம் போன்றும் உள்ளது. இதில் “” என்ற ஒலி இருக்கும். சுவாதிட்டானம் பஞ்சபூதங்களில் பிருதிவி அம்சம் உடையது.

இது எலும்பு (பிருதிவி + பிருதிவி) சதை (பிருதிவி + அப்பு) தோல் (பிருதிவி + தேயு) நரம்பு, (பிருதிவி + வாயு) மயிர் (பிருதிவி + ஆகாயம்) ஆகிய உறுப்புக்களைப்பற்றிய நோய்களோடு தொடர்புடையது, மேலும் சுவாதிட்டானம் விந்துப்பையோடும் (TESTICLES) சினைப்பையோடும் (OVARIES) தொடர்புடையது. உடல் உறுப்புகளில் கரு (WOMB) பிறப்புறுப்புகள் (GENITALS) சிறுநீரகம் (KIDNEY), சிறுநீர்பை (URINARY BLADDER) இவற்றோடு தொடர்புடையது. சுவாதிட்டானத்தின் செயல்பாட்டுக் குறைவுகளால் (MALFUNCTION) ஆண்மை குறைவு (STERILITY) மலட்டுத்தன்மை (IMPORTANCE) (FRIGIDITY) இனப்பெருக்க கழிவுநீக்க மண்டல நோய்கள் (GENITO-URINARY TROUBLES) அடி முதுகுப்பிடிப்பு மற்றும் வலி (STILF AND PAIN LOW BACK) போன்ற நோய்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது.

சுவாதிட்டானத்தைத் தூண்டுதல்:

சுவாதிட்டானதைத் தூண்டுவதன் மூலம் சுவாதிட்டான செயல்பாட்டு குறைநோய்களை குணப்படுத்தலாம். இதற்கு கீழ்கண்ட மருத்துவமுறைகளை கையாளலாம்.

1. சுவாதிட்டான வர்ம தூண்டல் முறை :

விரல்களால் தூண்டும் முறை

சுவாதிட்டான வர்மங்கள் 7 ஆகும். அவைகளாவன:

மூத்திர வர்மம் 1
கீழ் சுருக்கி வர்மம் 2
அரையாப்பு வர்மம் 2
பொருத்து வர்மம் 2

மேற்கண்ட சுவாதிட்டான வர்ம புள்ளிகளைத் தூண்டி சுவாதிட்டான ஆதாரத்தையும் தடவுவதன் மூலம் சுவாதிட்டான ஆதாரத்தை தூண்டலாம். இதனால் பிருதிவி பூதக்குறைபாடுகளை சீர்செய்யலாம். மேலும் சுவாதிட்டான ஆதார குறைபாடு நோய்களை களையலாம்.

வர்ம – வாசி யோக தியானத்தினால் தூண்டும் முறை :

“உருப்பிலே வகார மந்திரத்தை யுன்னி

உயிர் வாயுவை குப்பிக் கிலுருவுந் தோன்றும்”

(வர்ம கண்ணாடி-500)

வாசி யோக தியானத்தின் போது சுவாதிட்டான ஆதாரத்தின் ஒலியான “” என்ற ஒலியை உச்சரிப்பதன் மூலம் சுவாதிட்டான ஆதாரத்தினை தூண்டியும், உள்ளுணர்வில் சுவாதிட்டான வர்மங்களில் வாசியை ஏற்றியும் சுவாதிட்டான ஆதாரத்தினை தூண்டலாம்.

2.யோகாசன பயிற்சிகள் :

கீழ்காணும் யோகாசனப் பயிற்சிகள் சுவாதிட்டான ஆதாரத்தை தூண்ட பயன்படுகிறது.

 1. உக்ராசனம்
 2. புஜங்காசனம்
 3. நாகாசனம்
 4. உத்ராசனம்(USHTRASANA)
 5. கோமுகாசனம்
 6. யோக முத்ரா
 7. வக்ராசனம்
 8. திரிகோணாசனம்
 9. ஏக பாத ஜனு சிரசாசனம்

3. பிராண சக்தியால் தொடாமல் தூண்டும் முறை :

பிராண சிகிக்சை (PRANIC HEALING) மருத்துவரால் இது செய்யப்படுகிறது.

3.மணிப்பூரகம்

அரியமணி பூரகமாம் அத்தலத்தில்

ஓமெனவே கீழுந்தி தொப்பிள் தன்னில்

உற்ற செலாசயத்தில் நடுமத்தியத்தில்

மேவெனவே ரெத்த நிற கமலமாகும்

விரிந்த மலர் பக்திதன் மேல் பள்ளிக்கொள்ளும்

வாமெனவே பச்சைமாலுந்தி தன்னில்

வகையாக அறுத்தடைந்த வாசலொன்றில்

வளர்ந்த சந்திர புஷ்கரணி கமலந்தானே.

(102 வர்மலாட சூத்திரம் 300)

மணிப்பூரகம்

இது சுவாதிட்டான ஆதாரத்துக்கு ஆறுவிரலுக்கு மேலே தொப்புள் (UMBLICUS) பகுதியில் உள்ளது. இது LAMBAR PLEXUS- உடன் தொடர்புடையதாகக் கொள்ளப்படுகிறது. இது பத்து இதழ் தாமரை மலர் போன்றும் நடுவே பிறை போன்ற வடிவத்துடனும் இருப்பதைப் போல தோன்றும். இதில் “” என்ற ஒலி இருக்கும்.

இது பஞ்சபூதங்களில் அப்பு அம்சம் உடையது. இது சிறுநீர் (அப்பு+அப்பு) உமிழ்நீர் (அப்பு + பிருதிவி) வியர்வை (அப்பு + தேயு) இரத்தம் (அப்பு + வாயு ) சுக்கிலம் (அப்பு + ஆகாயம்) ஆகியவற்றின் நோய்களோடு தொடர்புடையது. மேலும் மணிப்பூரக ஆதாரமனது கல்லீரல் (LIVER) கணையம் (PANCREAS) இரைப்பை (STOMACH) மண்ணீரல் (SPLEEN) பித்தப்பை (GALLBLADDER) குடல் (INTESTINES) நரம்பு மண்டலம் (SYMPATHETIC NERVOUS SYSTEM) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

மணிப்புரகத்தின் செயல்பாட்டுக்குறைவுகளால் இரைப்பை மற்றும் குடல்புண்கள் (ULCERS) மதுமேகம் (DIABETES) குறைசர்க்கரை நோய் (HYPOLYCEMIA) சீரணமண்டல நோய்கள் (DIGESTIVE DISORDERS) போன்றவை தோன்ற வாய்ப்பு உள்ளது.

மணிப்பூரகத்தைத் தூண்டுதல்:

மணிப்பூரக ஆதாரத்தைக் தூண்டுவதன் மூலம் மணிப்பூரகத்தோடு தொடர்புடைய நோய்களை பரிகரிக்கலாம்.

1. மணிப்பூரக வர்ம தூண்டல் முறை:

விரல்களால் தூண்டும் முறை

மணிப்பூரக வர்மங்கள் 10 ஆகும். அவைகளாவன

உறுமி வர்மம் 1
அன்ன வர்மம் 2
அத்திசுருக்கி வர்மம் 2
முண்டெல்லு வர்மம் 2
முன் – புறச்சுற்றி வர்மம் 2
கொடிசுற்றி வர்மம் 1

மேற்கண்ட மணிப்பூரக வர்மப்புள்ளிகளை தூண்டி மணிப்பூரக ஆதாரத்தையும் தடவுவதன் மூலம் மணிப்பூரக ஆதாரத்தை தூண்டலாம். இதனால் அப்பு பூதக் குறைபாடுகள் சீர் செய்யலாம். மேலும் மணிப்பூராக ஆதார குறைபாடு நோய்களை களையலாம்.

வர்ம – வாசி யோகதியானத்தினால் தூண்டும் முறை :

“ கோணாமல் வாசி கொண்டு வங்கென்றோதி

அன்றாக ஒதினதால் உலக வாழக்கை

அதனோடிருள் வெளியாம் ஊன்றிப்பாரு”

(வர்ம கண்ணாடி -500)

வாசி யோக தியானத்தின் போது மணிப்பூரக ஆதாரத்தின் ஒலியான “ம” எழுத்தை உச்சரிப்பதன் மூலம் மணிப்பூரக ஆதாரத்தினை தூண்டியும். உள்ளுனர்வினால் மணிப்பூரக ஆதாரம் மற்றும் அதன் வர்மங்களின் வாசியை ஏற்றி வங்…. என்று ஓதியும் மணிப்பூரக ஆதாரத்தினை தூண்டலாம்.

2. யோகாசன பயிற்சிகள் :

கீழ் காணும் யோகாசனப் பயிற்சிகள் மணிப்பூராக ஆதாரத்தை தூண்ட பயன்படுகிறது.

 1. பாதஹஸ்தாசனம்
 2. தனூராசனம்
 3. உட்டியான பந்தனம்
 4. நௌலி
 5. பச்சிமோத்தாசனம்

3. பிராண சக்தியால் தொடாமல் தூண்டும் முறை:

பிராண சிகிச்சை (PRANIC HEALING) மருத்துவரால் இது செய்யப்படுகிறது.

4.அனாகதம்

சந்திர புஷ்கரணி மேல் விசுத்திக் கீழே

தக்கதொரு மேதினியல் அனாகதத்தின் தானும்

சுந்தரம் போல் முக்கோண வீட்டுக்குள்ளே

சொல்லொண்ணா காஞ்சனத்தின் நிறம் போலாகும்

விந்தையாய் மலரொன்றில் இதழீராறு

மேவி நின்ற ருத்திரருட வீட்டுக்கப்பால்

அந்தரமாம் வட்டமோ ரதத்தின் கீழே

ஆழகான மேருவின் நடுத்தலங்களாமே

(103 வர்மலாட சூத்திரம் 300)

அனாகதம்

இது “இதயசக்கரம்” எனவும் அழைக்கப்படுகிறது. இது மணிப்பூராகத்துக்கு எட்டு அங்குலத்திற்கு மேலாக உள்ளது. இது CARDIAC PLEXUS உடன் தொடர்புடையதாக் கொள்ளப்படுகிறது. இது பன்னிரண்டு இதழ் தாமரை மலர்போன்ற அதன் நடுவே முக்கோண வடிவம் போன்றும் உள்ளது. இதில் “சி” என்று ஒலி இருக்கும்.

இது பஞ்சபூரங்களில் தேயுவின் அம்சமுடையது. இது தூக்கம் (தேயு+தேயு) பசி (தேயு + பிருவிதி) தாகம் (தேயு + அப்பு) சோம்பல் (தேயு+வாயு) சேர்க்கை (தேயு + ஆகாயம்) போன்ற உடலியக்கங்களோடு தொடர்புடையது. அனாகத ஆதாரமானது இதயம் (HEART) நுரையீரல் (LUNGS) தைமஸ் சுரப்பி, வேகஸ் நரம்பு, இரத்த சுற்றோட்டம், புயம், கைகள் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

அனாகதத்தின் செயல்பாட்டுக்குறைவால் (MALFUNCTION) இரைப்பு இருமல் (ASTHMA) அதிகுருதி அழுத்த நோய் (HIGH BLOOD PRESSURE) இதய நோய்கள், நுரையீரல் நோய்கள் வருகின்றன.

அனாகத்தை தூண்டுதல்:

அனாகத ஆதாரத்தைத் தூண்டுவதன் மூலம் அனாகத்தோடு தொடர்புடைய நோய்களை குணப்படுத்தலாம். இதற்கு கீழ்கண்ட மருத்துவ முறைகளை கையாளலாம்.

1. அனாகத வர்ம தூண்டல் முறை

விரல்களால் தூண்டும் முறை

அனாகத வர்மங்கள் 41 ஆகும். அவைகளாவன

கூம்பு வர்மம் 1
மார்பு வர்மம் 8
வாய்வு வர்மம் 8
பூட்டெல்லும் வர்மங்கள் (5+5) 10
திவளை வர்மம் 2
சித்திரக் காலம் 2
சக்தி வர்மம் 1
நேரு வர்மம் 1
வெள்ளீரல் வர்மம் 1
காரீரல் வர்மம் 1
பித்து வர்மம் 2
கைக்குழி வர்மம் (2+2) 4

மேற்கண்ட அனாகத வர்ம புள்ளிகளை தூண்டி அனாகத ஆதாரத்தையும் தடவுவதன் மூலம் அனாதக ஆதாரத்தை தூண்டலாம். இதனால் தேயுவின் குறைபாடுகளை சீர்செய்யலாம். மேலும் அனாகத ஆதார குறைபாடு நோய்களையும் களையலாம்.

வர்ம – வாசி யோகதியானத்தினால் தூண்டும் முறை :

“இகழாமல் வாசி வைத்து சிங்கென்றோதி

சரிந்ததொரு தூலமது இளமையாகும் “

(வர்ம கண்ணாடி-500)

யோக தியானத்தின் போது அனாகத ஆதாரத்தின் ஒலியான “சி”என்ற ஒலியை உச்சரிப்பதன் மூலம் அனாதக ஆதாரத்தினை தூண்டியும், உள்ளுணர்வினால் அனாகத ஆதாரம் மற்றும் அதன் வர்மங்களில் வாசியை ஏற்றி சிங்… என்று ஓதியும் அனாதக ஆதாரத்தினை தூண்டலாம். இதனால் உடல் இளமையாகும்.

2 யோகாசனப் பயிற்சிகள்:

கீழ்காணும் யோகசனப் பயிற்சிகள் அனாகத ஆதாரத்தை தூண்ட பயன்படுகின்றன.

 1. பாம்பாசனம்
 2. மச்சானம்
 3. விபரீத கரணி
 4. பிரம்ம முத்திரை
 5. குக்குடாசனம்
 6. தடாசனம்
 7. திருகோணாசனம்

3. பிராண சக்தியால் தொடாமல் தூண்டும் முறை:

பிராண சிகிச்சை (PRANIC HEALING) மருத்துவரால் இது செய்யப்படுகிறது.

5 விசுத்தி

மேருவின் கீழ் மகேசுவரத்தின் விசுத்தி முக்கோண

விரிந்த மலர் சுவர்ந்த இதழீரெட்டு

பகருவேன் கழுத்துக் கீழ் கூம்பின் மேலே

பஞ்சவர்ண குகையாகும் இடப்பாகத்தில்

சேரும் இரத்தாசயமதுவாய் பின்தானும்

செங்கதழித் தோப்பு மறு வலப்பாக்கத்தில்

ஆகுமே கருங்கதழி தோப்பாகும்

அதினுள்ளே ஈரல்ஞ்சும் அடக்கந்தானே.

(104 வர்மலாட சூத்திரம் 300)

விசுத்தி

இது அனாகத்திற்கு பன்னிரெண்டு அங்குலத்திற்கு மேலாக கழுத்துப் பகுதியில் உள்ளது. இது அறுகோனமாய் இருக்கம் இதில் 16 இதழ் தாமரை போன்றும். அதன் நடுவே “:வ” என்ற ஒலி இருக்கும்.

இது பஞ்சபூதங்களில் வாயுவின் அம்சமுடையது. இது ஓடல் (வாயு + வாயு) படுத்தல் (வாயு + பிருதிவி) நடத்தல் (வாயு + அப்பு) உட்காருதல் (வாயு + தேயு) தாண்டல் (வாயு + ஆகாயம்) போன்ற செயல்களோடு தொடர்புடையது.

விசுத்தி ஆதாரமானது கழுத்து, பாராதைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளோடும தொடர்புடையது.

விசுத்தி செயல்பாட்டுக் குறைவால் (MALFUNCTION) தொண்டடை நோய்கள், கழுத்து இறுக்கம், சலதோசம், தைராய்டு நோய்கள், செவித்திறன் குறைபாடுகள் இவை ஏற்படலாம்.

விசுத்தியை தூண்டல் :

விசுத்தி ஆதாரத்தை தூண்டுவதன் மூலம் விசுத்தி ஆதாரத்திலிருந்து சக்தியை வெளிப்படுத்தி அவ்வாதாரத்தோடு தொடர்புடைய நோய்களை குணப்படுத்துதல். இதற்கு கீழ் கண்ட நுட்பங்களை கையாளலாம்.

1. விசுத்தி வர்ம தூண்டல் முறை :

விசுவத்தி வர்மங்கள் பதினைந்தாகும். அவைகளாவன:

சுமை வர்மம் 1
தும்பி வர்மம் 1
இறங்குகின்ற காலம் 1
சங்குதிரி வர்மம் 1
கொக்கி வர்மம் 1
தொண்டை வர்மம் 1
காக்கட்டை வர்மம் 2
முடிச்சு வர்மம் 1
ஆராய்ச்சி வர்மம் 1
பிடரி வர்மம் 1
நரம்பு வர்மம் 2
கண்ணு தள்ளு வர்மம் 2

மேற்கண்ட விசுத்தி வர்ம புள்ளிகளை தூண்டி விசுத்தி ஆதாரத்தையும் தடவுவதன் மூலம் விசுத்தி ஆதாரத்தை தூண்டலாம். இதனால் வாயு பூதக் குறைபாடுகள் சீராகப்படுகின்றது. மேலும் விசுத்தி ஆதார குறைபாடு நோய்களும் களையப்படுன்றது.

வர்ம – வாசி யோக தியானத்தினால் தூண்டும் முறை :

“கதியாகும் வங்கென்று யிருத்திப்பார்க்க

கனவய சொல்லாமனதில் கருதிப்பாரு”

(வர்ம கண்ணாடி-500)

வாசி யோக தியானத்தின் போது விசுத்தி ஆதாரத்திற்கான ஒலியான “வ” என்ற எழுத்தை உச்சரிப்பதன் மூலம் விசுத்தி ஆதாரத்தை தூண்டியும், உள்ளுணர்வினால் விசுத்தி ஆதாரம் மற்றும் தன் வர்மங்களில் வாசியை ஏற்றி வங்… என்ற ஓதியும் ஆதாரத்தை தூண்டலாம்.

2. யோகாசன பயிற்சிகள் :

கீழ் காணும் யோகாசனப் பயிற்சிகள் விசுத்தி ஆதாரத்தை தூண்ட பயன்படுகிறது.

 1. சர்வாங்காசனம்
 2. ஹலானசம்
 3. தனுராசனம்
 4. உத்ராசனம்
 5. பிரம்ம முத்திரா

3. பிராண சக்தியால் தொடாமல் – தூண்டும் முறை :

பிராண சிகிச்சை (PRANIC HEALING) மருத்துவரால் இது செய்யபடுகிறது.

6. ஆக்கினை

அதின்மேலே ஆகாசம் அக்னி வட்டம்

அழகான மூங்கிலடி லாடத்தின் கீழ்

நீதிபெறும் ஆண்டி மனோன்மணியோடொத்து

நிலைத்திருக்கும் மூவிதாழம் கமலத்துள்ளே

பதியதிலே பிறையுண்டு இதழுண்டு

பகர்ந்த தீ நிறமாகும் அதின் மேலாக

இசல்வான அமிர்த புஷ்கரணி வட்டம்

இதற்குள்ளே நெருப்புக் கண்ணாகுந்தானே

(105 வர்மலாட சூத்திரம் 300)

ஆகுமந்த நெருப்புக் கண்ணாக்கின் மேல்

ஆழந்ததொரு சுவாசம் தீர்த்த மதிலேயுண்டு

செங்கமலம ஆயிரத்தெட்டு இதழில் பீடம்

சடகோடி சூரிய பிரகாசம் சுற்றி

மேலிருக்கும் பூரணத்தைப் பணிந்து போற்றி

மேவுக்கின்ற ஆயிரத்தெண் மாற்றுக் கோவில்

பொன் மகுட மணிவிளக்கினொளியைப் போற்றி

பூட்டினேன் நெருப்பெட்டும் கண்ணுதானே

(106 வர்மலாட சூத்திரம் 300)

ஆக்கினை

இது விசுத்திற்கு பன்னிரெண்டு விரலளவுக்கு மேலே இரு புருவங்களுக்கும் மையத்தில் உள்ளது. இரண்டு இதழையுடைய கமலம் போலவும். அதன் நடவே “ய” என்ற ஒலியும் இருக்கும்.

இது பஞ்சபூதங்களில் ஆகாய + ஆகாயம்) இராகம் (ஆகாயம் + பிருதிவி) துவேசம் (ஆகாயம் + அப்பு ) பயம் (ஆகாயம் தேயு) நாணம் (ஆகாயம் + வாயு) போன்ற மன உணவர்களோடு தொடர்புடையது. ஆக்கினை ஆதாரமானது கண்கள். மூளை மற்றும் பீனியல் சுரப்பி இவற்றோடு தொடர்புடையது.

ஆக்கினை செயல்பாட்டு குறைவால் (MALFUNCTION) கண் பார்வை குறைபாடுகள். தலைவலி, கண் களைப்பு, பயமுறுத்தும் கனவுகள் இவை வரலாம்.

ஆக்கினையத் தூண்டல் :

ஆக்கினை ஆதாரத்தை தூண்டுவதன் மூலம் ஆக்கினை ஆதாரத்திலிருந்து சக்தியை வெளிப்படுத்தி, அவ்வாதாரத்தோடு தொடர்புடைய நோய்களை குணப்படுத்தலாம். இதற்கு கீழ்கண்ட நுட்பங்களை கையாளலாம்.

1. ஆக்கினை வர்ம தூண்டல் முறை:

விரல்களால் தூண்டும் முறை :

உறக்க வர்மம் 2
ஒட்டு வர்மம் 1
கழுமுனை வர்மம் 1
கொம்பேறி வர்மம் 1
பின் வெட்டி வர்மம் 2
கடைக்கண் வர்மம் 2
சூத்திர வர்மம் 2
கண்ணாடி வர்மம் 1
திலர்த் வர்மம் 1
பட்சி வர்மம் 1
பொருத்துவர்மம் 1
பதப்பு வர்மம் 1
உச்சி வர்மம் 1
சீறும் கொல்லி 1
செவிக்குத்தி 2
சன்னி வர்மம் 2
பொய்கை வர்மம் 2
நட்சத்திர வர்மம் 2
சென்னி வர்மம் 2
காந்தி வர்மம் 2
குற்றி வர்மம் 2

மேற்கண்ட ஆக்கினை வர்ம புள்ளிகளை தூண்டி ஆக்கினை ஆதாரத்தைத் தடவுவதன் மூலம் ஆக்கினை ஆதாரத்தைத் தூண்டலாம். இதனால் ஆகாய பூதக் குறைபாடுகளை சீர்செய்யலாம். மேலும் ஆக்கினை ஆதார குறைபாடு நோய்களையும் களையலாம்.

வர்ம – வாசி யோகத்தியானத்தினால் தூண்டும் முறை :

“தான் நின்று கும்பித்தால் தேகம் சித்தி”

(வர்ம கண்ணாடி-500)

வாசி யோக தியானத்தின் போது ஆக்கினை ஆதாரத்தின் ஒலியான “” என்ற எழுத்தை உச்சரிப்பதன் மூலம் ஆக்கினை ஆதாரத்தின் ஒலியான உள்ளுணர்வினால் ஆக்கினை ஆதாரம் மற்றும் தன் வர்மங்களின் வாசியை ஏற்றியும் ஆக்கினை ஆதாரத்தினை தூண்டலாம். இதனால் உடல் சித்தியடையும்.

2. யோகாசன பயிற்சிகள் :

கீழ் காணும் யோகாசனம் பயிற்சிகள் ஆக்கினை ஆதாரத்தை தூண்டுவதற்கு பயன்படுகின்றன.

 1. சர்வாங்காசனம்
 2. சிரசானம்
 3. சிம்மாசனம்
 4. சவாசனம்
 5. மகராசனம்
 6. பாலாசனம்
 7. கண் கிரியை
 8. விரிக்ஸôசனம்
 9. ஏகபாதாசனம்

3. பிராண சக்தியால் தொடமல் தூண்டும் முறை :

பிராண சிகிச்சை நிபுணரால் செய்யப்படும்.

7. சகஸ்ராம்

எட்டுக்கண் இருப்பிடம்

நெருப்புக்கண்ணாகுமிது நெற்றிக்கண்ணாம்

நிலையில்லா மாய்கைதனை அகற்றும் கண்ணாம்

கற்பழிக்கும் மனமதனை எரித்தக் கண்ணாம்

கரிய முப்புரம் தனையே தகர்க்கும் மண்ணாம்

விருப்பம் முற்றி ஞானவழி துறக்கும் கண்ணாம்

மேவு தொண்ணுற்றாறு வரையும் நீற்றும் கண்ணாம்

மருப்புகலும் யோகவழி திறக்கும் கண்ணாம்

மதியொடுங்கி ரெவியொன்றாய் சேரும் கண்ணாம்

(107 வர்மலாட சூத்திரம் 300)

சகஸ்ராம்

இது ஆக்கினையிலிருந்து எட்டு விரலுக்கு மேலே உள்ளது. இது ஐங்கோணமாகவும், இதை சுற்றிலும் 1008 இதழ்களுடைய தாமரையை போலவும் இருக்கும். இதில் “” – - “” ஆகிய ஒலிகள் இருக்கும். இது லாட மையத்தின் இருப்பிடமாகும். பிட்யுட்டரி கோளம், முளையுறணி (CEREBRAL CORTES) மத்திய நரம்பு மண்டலம் (CNS) ஆகியவற்றோடு தொடர்புடையது.

இதன் செயல்பாடுக் குறைவால் மன அழுத்தம் (DEPRESION) உள நோய் (ALIENATION) மனக்குழப்பம் (CONFUSION) வெறுப்பு (BOREDOM) உணர்ச்சியின்மை (APATHY) புரிந்து கொள்ள இயலாமை (INABILITY TO LEARN) போன்ற அறிவு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

எல்லா ஆதாரங்களுக்கும் மேலாக இருக்கும் இந்த சகஸ்ராரத்தைச் செயல்படச் செய்ய வாசி யோகதியானம் மற்றும் பிராணாயாமம் அவசியம்.

5 வர்ம -வாசியோக தியானம்

வர்ம – வாசி தியானப் பயிற்சி செய்ய தேவைக்கும் தகுதிக்கும் ஏற்ப கீழ்காணும் ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

தியானத்திற்கேற்ற ஆசனங்கள்

 1. பத்மாசனம்
 2. சுகாசனம்
 3. சுவஸ்திக்காசனம்
 4. சித்தாசனம்
 5. வஜ்ஜிராசனம்

தியானம் செய்ய வேண்டுவோர்கள் இயம நியமாதிகளை கடைபிடிப்பது நல்லது. அட்டாங்க யோகத்தின் சமாதிக்கு முந்தைய ஏழாவது அங்கமே தியானமாகும். எனவே அதற்கு முந்தைய அங்கங்களை அப்பியாசிப்பது அவசியமானதாகும். இதில் பிராணாயாமம் செய்வது மிகவும் முக்கியமானதகும். பிராணாயாமத்தில் கிடைக்கும் வாசியை தியானத்தின் துணையோடு ஆதாரங்களின் அட்சர இதழ்களில் செலுத்தி ஆதாரங்களை இயங்கச் செய்வதது அதன் வர்ம தலங்களில் செலுத்தி அவற்றை உறுதியடையச் செய்வதுமே இதன் தலையாய நோக்கமாகும்.

“நயன்மிரண்டு நாசிமேல் வைத்திட்

டுயர்விலா வாயுவையுள்ளே யடக்கித்

துயரறா நாடியே தூங்கவல்லார்க்குப்

பயனித்து காயம் பயமில்லை தானே”

(திருமந்திரம்-585/3000)

ஏதேனுமொரு ஆசனத்தை தெரிவு செய்து அம்முறையில் அமர்ந்து கொண்டு கண்கள் இரண்டையும் மூக்கின் மேல் நிறுத்தி, வாயு எனும் பிராணனை அல்லது வாசியை மருத்துவத்துக்கு அல்லது ஆரோக்கியத்துக்கு தேவையாக தெரிவு செய்த ஆதாரங்கள் மற்றும் தன் வர்ம தானங்களில் உள்ளுணர்வின் மூலம் ஏற்றிவிட ஆதாரங்களும் அதன் வர்ம தலங்களும் இயங்கும். வாசி எனும் சரம் ஆதார இதழ்களின் வழியே உந்தப்பட்டு உடல் முற்றும் சுற்றும் அப்போது ஆதாரங்கள் தூண்டப்பெறும் அலலது உறுதியடையும்.

“உள்ளுணர்வாய் அத்தலங்கள் வாசியேற்ற

உற்றதினால் அத்தங்கள் உறுதி சேரும்”

(வ.ஒ.மு.சரசூத்திரம்-1200)

இவ்வாறு வாசி யோகதியானத்தில் வர்மத்தை பயன்படுத்தும் போது உடல் உறுதியடையும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். எனவே நோய் வராமல் தடுக்கும் (டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ஸ்ங் ம்ங்க்ண்ஸ்ரீண்ய்ங்) மருத்துவ நுட்பமாக இதை கையாளலாம்.

6. ஆதார அட்சர இதழ்களின் வர்ம-காயவில் முக்கியத்தும்

ஆதாரங்களில் அமைந்துள்ள இதழ்களில் அதற்கான ஒலியுடன் அதாவது அதிர்வெண்ணுடன் கூடிய அட்சரங்கள் (எழுத்துக்கள்) அமைந்துள்ளன. ஒவ்வொரு சுவாசத்திலும் பாழாகும் 1/3 பங்கு சரத்தைத் தவிர்த்து, பயனுடையதாக இருக்கும். 2/3 பங்கு சரம் ஆதாரங்களில் சென்று இந்த அட்சராங்களில் ஏறிமுட்டி உந்தி உட்புகுந்து உடலெங்கும் சுற்றி அம்பரத்திலோடும்.

“ஏற்றபடி நானென்ற ஐம்பத்தொன்றும்

இதமான அட்சரம் கொண்டேறிமுட்டி

சிந்தமனங்கொண்டு அவன் செய்கையாலே

திடமாக மூன்றிலொன்று பாழாய்போச்சு

மாற்றாறாய் வந்தணுகா மற்றீர்பங்கும்

மகிமை பெறும் ஐயாறு எழுத்தோடுன்னி

காத்த பெரியோரருளால் உட்புகுந்து”

காயமெங்கும் சுற்றியம்பரத்திலோடும்

(வ.ஒ.மு.ச.சூ-332/1200)

சரத்தை உடலுக்குள் கொண்டு செல்லும் வாயிலாக இந்த அட்சரங்கள் இருந்தாலும் அவற்றின் இதழ்கள் வர்ம காயங்களுக்கு உட்படும்போது பல பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன.

ஆதார அட்சர இதழ்கள் மொத்தம் 51 ஆகும். அவை :

மூலாதாரம் 4
சுவாதிட்டானம் 6
மணிப்பூரகம் 10
அனாகதம் (2 * 6) 12
விசுத்தி 16
ஆக்கினை 2
சகஸ்ராரம் 1
மொத்தம் 51

1. மூலாதாரம்:

“ஓமென்ற பொருளாதி பிரிவு மூன்று

உருநரம்பு மூன்றுகோண் மூன்று வட்டம்

தாமென்ற வட்டமதிலிழ்கள் சுற்றி

சார்பாக நிற்குமதி லிருக்கும் தேவர்

வாமென்ற பேர் கேட்டாலாணும் பெண்ணும்

வகுப்பதற்கு வருத்தம் மூலாதாரம்

நாமென்ற நினைவதானால் தியானம் செய்து

நாடி விரல் பதிப்பதற்கு நவில்வோமே”

(வ.ஒ.மு.சரசூத்திரம்-1200)

மூலாதாரம் முக்கோணம் வடிவமாயும், அதைச்சுற்றி வட்டமும், அதைச் சுற்றி நான்கு இதழ்களும் இருக்கும். இந்த நான்கு இதழ்களிலும் நான்கு அட்சாரங்கள் இருக்கும் (வம் சம் சம் சம் )

இதழ் 1 : முக்கால் மாத்திரை பதித்துவிட்டு நடந்துவரச் சொன்னால் நடக்க முடியாமல் கிடுகிங்கி நிற்பர்.

இதழ் 2 : அடுத்த இதழின் பொய்கைக்குள்ளே தாக்கிவட வேதனை உண்டாகும். கால் ஒன்று விளங்காது வாதம் வந்து தொடுக்கும்.

இதழ் 3 : சுழியின் கீழே உள்ள இதழில் விரலால் தொட மயக்கம் வரும். கோச்சல் காணும். பனிச்சுரம் வரும். லிங்கத்திற்கு பலகீனம் உண்டாகும். விசை நரம்பு ஆட்டம் கண்டு தளர்ச்சை. குன்மம் கொழுகி வரும். பீச நரம்பில் வீக்கம் காணும். தாது வரவைத் தடுக்கும். மூலமுளை சனிக்கும்.

இதழ் 4 : நான்காம் இதழ் பொய்கை நடுவே தாக்கி பதினாறு நாட்கள் சென்றபின் கொழுத்து வரும். பதினெட்டில் (மூவாறில்) வாதம் வரும். காலுக்கு வேதனை உண்டாகும். இரண்டு மாதத்தில் அரையாப்பு உண்டாகும். தேர்ந்த மருந்து செய்யாவிட்டால் தொல்லை வரும்.

நடுத்தானம் : இதழ்களில் நடுவில் ஒரு தானமுண்டு எல்லை என்ற இத்தானம் கொல்லவும் வெல்லவும் செய்யும். இதன் நடுவிரல் பதித்துவிட இருகண்ணும் மயங்கும். மயக்கமுண்டாகும். நேராக ஏந்தி விட அருணன் ஒளி துலங்கி எழுந்து இருப்பான். கீழ்நோக்கி இருத்தி பதிக்க மூலம் தள்ளும். ஆறு மாதம் முடியும் போது மூலநோய் தொந்தமாகும். மல ஜலங்கள் தடைபடும். பக்கம் இரண்டிலும் பதித்துவிட பவுந்திரங்கள், மூலவாயு, வன்கிராணி வரும். முக்காவரியில் கைவைக்க கால் கடிகை கழியும் போது விருவிருப்பு தோன்றும். சற்று நேரம் தொடுத்துப் பிடிக்க பெருவிரலை விரைக்கச் செய்யும். அரை மாத்திரை பிடிக்க புறஞ்சாயும், இன்னும் கொஞ்சம் அதிகம் பிடிக்க நெஞ்சில் குத்து உண்டாகும். முக்கால் மாத்திரைப் பிடிக்க செவியடைக்கும். பின் அலவுக்கோச்சும். கால் மாத்திரை பிடிக்க ஆறுமாதத்திற்கு பிறகு அடியெடுத்து நடக்கும் வாதத்தை கொண்டு வரும். அரை மாத்திரைக்கு பக்கவாதமும் வரும். மூன்று ஆண்டு சென்றபிறகு நெஞ்சுளைவு நோவு, சுரம், இருமல், ஈளை. காசம் இவை வரும். முக்கால் என்றால் பத்து மாதம் பார்வை அல்லது செவிகேட்கமாட்டாது இருக்கும். இரண்டு வருடம் முடியும் போது திமிர் காணும். விரையல் வரும். ஆறு மாதங்கள் கடக்கும் போது தீராத நடுக்குவாதம் வரும்.

2. சுவாதிட்டானம் :

“கண்டுநீ செய்திடவே இன்னுமொன்று

காரணவான் இருந்ததிரு பீடத்துள்ளே

விண்டபடி சகஸ்ததிரமாய் கலைகள் தங்கும்

விஸ்தார விட்ட சதிர்பக்கஞ்சுற்றி

அண்டர்புகழ் தேவரங்கே வளைந்து நிற்பர்

ஆறிதழாய் அமைந்த நடுநிலைகள் கண்டு”

கொண்டாடும் தேவர்களுக்கும் தலைத்திருத்த

கூறுகிறேன் மாத்திரையை கூர்ந்து பாரே

(வ.ஒ.மு.சரசூத்திரம்-474/1200)

கலைகளுக்கு இருப்பிடமான சுவாதிட்டான பீடம் நான்கு பக்கங்களை உடையதும் சுற்றி ஆறு இதழ்களை கொண்டதுமாக இருக்கும். இந்த ஆறு இதழ்களிலும் ஆறு அட்சரங்கள் இருக்கும். இந்த அட்சர இதழ்கள் வழியே சரம் முட்டி மோதி உடலினுள் உட்புகும்.

இதழ் 1 : ஆதி தேவதை எனும் தலத்தில் மையத்தில் பதித்துவிட மலம் போகும். ஏந்தினால் கால்களை ஊன்ற இயலாது. ஓராண்டில் வாதசுர தொந்தம் வரும். கீழிருத்தி சரித்து தள்ளினால் இலிங்கம் எழுந்திடும். இத்தலத்தில் இடிகள் ஏற்றால் இலிங்கம் குழையும். அபானம் விரியும்.

இதழ் 2 : சுழியின் இரண்டு இறைக்கும் கீழே இருக்கும் இதழ் உயிர் கொடுக்கவும். உணர்விழக்கவும், அசதி வரச்செய்யவும். அசதியைப் போக்கவும். விக்கிள் மாற்றவும் பயன்படும் அரிதான தானமாகும். இலிங்கத்தை குறுக்கவும் நீட்டவும் இந்த தானமே பயன்படுகிறது.

இதழ் 3 : சுழியின் மையத்திலுள்ள நடுத்தானத்தில் ஒரு மாத்திரை அமர்த்திவிட, பன்னிரண்டு நாட்கள் சென்ற பின் சிங்குசுரம் வரும். ஏந்திவிட நீர்தாரை தாரையாய் பாயும். நடுவில் இருந்த மருளும். ஏந்திவிட பக்குவாசயத்தில் குத்தும். கீழிருத்த மூலம் தள்ளும். இதழை வலபுறம் கறக்க சுரம் உண்டாகும். இடப்பக்கம் கறக்க கண் மருளும். காயசுரம் சுரம் விசம போலேறி பதினாறு நாட்களுக்குள்ளாக பலமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதழ் 4 : அடுத்த இதழின் யகார பீடத்தில் ஒன்றரை சுழியின் நடுவே பதித்து கறக்கி மேலிருந்த இலிங்கம் மறித்து ஆடும். கீழிருந்த இலிங்கம் தரிக்கும். நடுவில் விசைகளேற்றால் விசை நரம்பில் வாசி பிசுகும். தொங்கி நின்ற எந்திரமும் குடங்கும்.

இதழ் 5 : அடுத்த இதழின் கூம்புக்குள்விரல் கூர்மை தட்டும். படபடப்பாய் தோன்றும். ஆணவம் அடங்கும். நடுவே கறக்கிவிட பனியும் நடுக்கமும் மூன்றாம் நாளில் வரும். எட்டாம் நாளில் சுவாச காசம் வரும். அதற்குள் முன்னதாக சிகிக்சை செய்தால் கேடு வராது. பக்கத்தில் சரிந்து இரு அங்குலம் ஏந்திட ஏங்கிடும். அடப்ப தலத்தில் நீருண்டாகும். அதற்கு முன்னதாக தைலமிட வேண்டும்.

இதழ் 6 : வகாரமதன் நடுவிலூன்ற கண்கள் மருளும், கொழுத்தும் உண்டாகும். கோர வாதம் வரும் முன் கொடுவேலி வாற்றை ஊட்ட வேண்டும். தீராவிட்டால் ஒற்றல் செய்ய வேண்டும். அதிலும் மாறாவிட்டால் பிறதாரை நரம்பைப் பின்னி வில்லின் விசையில் தாக்கி முன்கூறிய கொடுவேலி வாற்றையை ஊட்ட வேண்டும். நன்மையாகும். உழுந்தென்ணெய் இட்டு தடவிட விசநீர்கள் இறங்கும்.

3. மணிப்பூரகம் :

“மாறுகின்ற நிலையுண்டு வழியுமுண்டு

வாதநிலையறுதியதில் துவாரங்கானே”

(வ.ஒ.மு.சரசூத்திரம்-1200) 483

“பிறைசுற்றி மதிலுங்க ஏவலாட்கள்”

காலிலிருந்து ஆரம்பிக்கும் வாத நிலையின் இறுதிப் பகுதியாகி தொப்புள் துவாரத்தில் இம்மணிப்பூரக ஆதாரம் அமைந்துள்ளது. இதன் நடுவில் பிறையும் அதைச்சுற்றிலும் பத்து இதழ்களும், அவ்விதழ்களில் பத்து அட்சரங்களும் (ட. ட. ட. ட. த. த. த. த. த) அமைந்திருக்கும்.

இதழ் 1 : முதலிதழில் இருத்தி மேலே நோக்கி ஏந்த மலர்ந்து சரிந்து மயங்கும். விரல் கொடுத்து கீழ் நோக்கி அமர்த்தி வல-இடமாக சரிந்து ஏந்த மருளல் தீரும். முன்னேந்த ஆறாம் மாத்தில் வாயு மிஞ்சி பேதி சலம் போல் பெருகும்.

இதழ் 2 : இரண்டாம் இதழ் நடுவே விரல் வைத்து பலமாக மாத்திரையளவு அனக்கும் போது பிழைப்பது அரிதாகும். ஈழையோடு இருமல், ஓயாத சுவாச முட்டு, அசதி இவைகாணும். நாற்பதாம் நாளில் பித்தம் வரும். பெரு வயிறும் வரும். இதை குணப்படுத்த மண்ணை நாக்கு அடங்கலின் அடிப்பாகத்தை கறக்கிவிட வேண்டும். வலது வசம் சரிந்து ஏந்த ஓராண்டுக்குள்ளாக குன்மம் வரும். இடது பக்கம் மூன்று இறை எல்லுமுனை ஓரத்தோடு பதித்துவிட உடலில் சொல்லமுடியாத பாதிப்புககள் வரும். பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு இளைப்புண்டாகும். மூன்று வருடங்களுக்குப் பிறகு பாரவலி தொடுக்கும்

இதழ் 3 : மூன்றாம் இதழில் விசைகளுற்றால் எல்லுருக்கி நோய் வரும்.

இதழ் 4 : இதழ் நான்கில் மத்திய விரல் கொண்டு இருத்தி அமர்த்திட மருளல் ஏற்படும். நடுவில் இருத்தி கறக்கிவிட குலை வழியே விஷநரம்பு பரபரத்து வாடிவிடும். மயக்கம், மருளல் வரும். கொழுத்து உண்டாகும். மந்தித்து எல்முனையில் விஷநீர் உண்டாகும். அது விஷம் ஏறுவது போல பாய்ந்து பொங்கி எழுபதில் விஷசுரத்தை உண்டு பண்ணும்.

இதழ் 5 : ஐந்தாம் இதழின் வலது வசம் தாக்கி கறக்க குடல் சரிந்து தள்ளும்.

இதழ் 6 : நடு இதழின் இருத்தித் தாக்க நீர்கடுப்பு வரும். கர்பிணிகளுக்கு இதில் காயம் கொண்டால் பெறும் குழந்தை இறக்கும். தாய்க்கும் நீரிழிவு (நீரொழிவு / நீரழிவு) வரும். இந்நீரிழிவை சுகமாக்க வழியுண்டு. இதமாகத் தடவி இந்த நிலையை சரியாக்கி தாயாரின் மடங்கு பதினாலும் பின்னி அலகுவை சுற்றிலும் கச்சை சுற்றி குணமாகிவிடுமென உறுதியாகச் சொல்லி திடப்படுத்தி விழைக்குள்ளே குடலை செலுத்தி மறிவை சரிசெய்ய வேண்டும். இதை குணப்படுத்த இன்னுமொரு முறை உண்டு. அதாவது மறிவை தடவிட்டு அமர்ந்த நிலையில் சரிந்து மறிந்திடாமல் கல்மத பூச்சு போட்டு பத்து வைத்து கச்சை கட்டி வர சுகமாகும். இதுபோக இன்னுமொருமுறை உண்டு. கால் இரண்டையும் சரியாக நீட்டி இதழ் பத்தோடு (மணிப்பூரகம்) ஆறு (சுவாதிட்டானம்) நான்கு (மூலாதாரம்) இதழ்களையும் அசைத்துக் தடவி, மெல்ல தோலைப் பின்னி கூட்டி அசைத்து, உதறி மறிவைத் தீர்த்து கச்சைக் கட்டிவிட்டு, நீட்டிய காலை உயர்த்தி கையால் நிலைப்டுத்தி கச்சை கட்டிப் போட வேண்டும். இவ்வாறு பத்து தடவை மெதுவாகச் செய்ய நன்மை உண்டாகும். இது கைகண்ட முறையாகும்.

இதழ் 7 : ஏழாம் இதழின் ஓரத்தில் இருத்திவிட சலாசயத்தில் குற்றம் தட்டும். ஏழாம் நாள் கபம் தொந்தமாகும். துடிதுடிக்கச் செய்யும். நோய் பலவும் உண்டாகும். எட்டுக்குள் காயசுரம் வரும். ஒருவிதமானவும் படுக்கமுடியாதபடி வேதனை உண்டாகும். கனவுகள் வரும். இதற்கு தசமூலாதி குடிநீரில் வர்ம இராசேந்திரக்குளிகை உரைத்து கொடுக்க குணமாகும்.

இதழ் 8 : எட்டாம் இதழில் கைகொடுக்கும் ஏந்தித்தள்ளினால் இடி விழுந்தது போலாகும். மயங்கிவடுவார். ஒட்டியிருக்கும் விசை நரம்பை கறக்கினால் ஓராண்டுக்குள் சயமெழுந்து உலர்ந்து போவர். இதழில் இருத்திப்பிடிக்க சுறு.. சுறுவென விஷம் போல் ஏறி சன்னிவாம் வரும். இருமாதம் செல்லும் போது குணமாகும். மரணமில்லை.

இதழ் 9 : ஒன்பதாம் இதழில் பதித்து எந்த காயம் சுழிக்குத் தாவி மயக்கத்தை ஏற்படுத்தும். பத்தாம் திங்களில் குடகரி வாய்வு எழும்பி கொல்லாமல் கொல்லும். மூன்று ஆண்டுகளுக்குள் சயம் உறைந்து வீக்கம், செரியாமை இவற்றைக் கொண்டு வரும். சீவன் ஒடுங்கிப் போகும்.

இதழ் 10 : பத்தாம் இதழில் விரலை ஊன்றி ஒரு சுழிசுழித்து மேலேந்த உடல் நடுக்கும். ஒன்பதாம் சுரம் வரும். நல்ல மருந்துகள் செய்தாலும் நாற்பத்தி ஒன்றாம் நாள் மரணம் வரும். இறப்பதற்கு முன்னதா இரத்த வாந்தி எடுக்கும். பத்தாம் இதழில் விரலை ஊன்றி கீழ்நோக்கி தாக்கிட புத்தியும், சித்தும் பேதலிக்கும். பலம் கெடும். குடல் வலிக்கும். இரததம் கக்கும். இதழின் நடுவில் விரலையூன்றி இடவலமாக அசைக்க சயமுறைந்து மரிக்கும். முன்னதா நினைவு மருளும். வாசி தடை ஏற்படும்.

4. அனாகதம் :

“வெல்லுகின்ற பகலவ போல் ஒளியாய்நிற்கும்

வேதாந்த கூடரொளிக்கு ஆதியாகி

அல்லுகின்ற இருட்டகற்றும் அறையைக் கண்டால்

ஆனந்த சாகரத்தில் மூழ்கலாமே”

“ஆமப்பா கழுத்தி யென்ற அரியவீடு

ஆறுரண்டாகுமிடம் அமைந்த வீடு”

சூடான கடிகார சூத்திரத்தில்

கொண்டு நிற்கும் கொள்கை

(வ.ஒ.மு.சரசூத்திம்-1200)

அஞ்ஞான இருளகற்றும் வேதாந்த சுடரொளிக்கு ஆதிவீடாகிய ஆதித்த மண்டலத்தில் இவ்வாதாரம் அமைந்துள்ளது. இதில் 12 இதழ்கள் ( 12 * 6) உள்ளன. 12 அட்சரங்கள் உண்டு. (க.க.க.க.ங.ங.ச..ச.ஜ.ஜ.ட.ட.) ஆறு இதழ்கள் இடப்பக்கமாகவும், ஆறு இதழ்கள் வலப்பக்கமாகவும் இரட்டையாக அமைந்துள்ளன. இதில் கடிகார சூத்திரம் அமைந்துள்ளது.

இதழ் 1 : ஒரு மாத்திரை அளவு இருத்திவிட வாசி எனும் கலை அடங்கும். பிராணவாயு முறையாக இயங்காமல் கண்டமெல்லாம் முட்டி முட்டி தடுமாறும். புஜ நரம்பு வலிக்கும். குறுக்கு கோச்சும். அதிக விசையாக இடி கொண்டால் கட்டுக்கள் அசையும். சீவகலை வேறாகும். இசைவுகள் மாறுவதால் மனம் சிதறும். மதி அகலும். அறிவு சாயும். மருளல் மீறி காலன் வந்து கொல்வது திண்ணம்.

இதழ் 2 : இரண்டாம் இதழில் இருபெருவிரல் கொண்டு மாத்திரை அளவு பதித்திருத்த உடல் குன்னும். ஊறுகின்ற ஊறணிகள் (சுரப்பிகள்) உலர்ந்து போகும்.. சன்னியோடு இருமல், ஈளை வரும். ஒரு மண்டலத்தில் மரணம் வரும். இந்த இதழின் நடுவில் விரல் பதிக்க லிங்கம் நீளும். கறக்கிவிட லிங்கம் கருங்கும் தெளிவாக பாதி சிறுநீர் போகாது. மயக்கும் வரும் சரித்து ஏந்த சயரோகம் தொந்தமாகும். பஞ்சகர்த்தா நிலை வேறாகிக் கொல்லும்.

இதழ் 3 : மூன்றாம் இதழில் விரலை வைத்துப்பிடிக்க உடல் விறைக்கும். மாத்திரை சற்று மாறினாலும் வாந்தி வரும். மாத்திரை அதிகம் மீறினால் சுவாசம் திறந்து போகும். முக்கால் மாத்திரை ஏற்றால் இந்திரியம் சொட்டாய் விழும். சுழிபேத மருளல் வரும்.

இதழ் 4 : நான்காம் இதழின் மத்தியில் இருத்தி அசைத்து ஊன்ற கண்ணடைக்கும். மூலம் விறைக்கும். மேல் வாசி தாவி பொருமலை உண்டு பண்ணும். கறக்கி பதித்துவிட கிரிசம் வந்துசயமாய் மாறும். ஏந்திவிட கண்கள் கறங்கும்.

இதழ் 5 : ஐந்தாம் இதழில் பிடிக்கும் பொழுது கண், மூக்கு வாய் அடைத்து வாசிமுட்டி செவி வழியே பாயும். துருத்தியில் காற்று செல்வதைப் போல உடலில் புகுந்து அடங்கும். சரிவில் ஏற்றிட எந்திரம் குடங்கும். கீழிருத்த பித்தம் ஏறி எழுந்து நடக்க முடியாதபடி ஆகி மரணத்தை வருவிக்கும்.

இதழ் 6 : ஆறாம் இதழில் நுனியில் பிடிக்க காயம் பதை ஈரல் பொய்ககையில் தாவி பேய் பிடித்ததைப் போல ஆடும். இதழ் இருத்திவிட மூலம் வழி இரத்தம் பாயும். உடல் துடிக்கும் மாத்திரை மிஞ்சினால் கொல்லும்.

“பாவாக சொல்லிவிட்டேன் அறிவுள்ளோர்க்கு

பகற்பிரிவு மிதுபோலாம் பாருபாரே”

இடது பக்கம் இதழ்களுக்கு உள்ளது போலவே வலதுப்பக்க இதழ்களுக்காகும்.

5. விசுத்தி

“பெருகியே ஈரெட்டாய் நின்ற பீடம்

போர்பெரிய நிலைககெல்லாம் அமைந்த பீடம்”

(வ.ஒ.மு.சரசூத்திரம்-521/1200)

ஆறுகோணத்தைச் சுற்றி 16 இதழ்கள் (2*8) அமைந்திருக்கும். அதில் 16 அட்சரங்கள் இருக்கும். (அ. ஆ. இ. ஈ. உ. ஊ.ரு. ரூ. லு. லூ. எ. ஏ. ஐ. ஒ. ஓ. ஒள.) இதழ்கள் வல-இடமென இரட்டையாக இருக்கும். இதுவே விசுத்தி ஆதாரத்தின் அமைப்பு ஆகும்.

இதழ் 1 : உயர்ந்த முதல் இதழில் பிடித்து கால் மாத்திரை இருந்த புகைளோறும். அரையரைக்கால் இருந்த மயங்கும். உருவி மேலேந்த நாக்குத் தள்ளும். கீழேதள்ள நாக்கு தாழும். சரித்து நழுக்கிவிட தயங்கிப் போகும்.

இதழ் 2 : இரண்டாம் இதழில் பிடிக்க உறங்கிப்போவர். இதழோரம் மருவி நிற்கும். குமிழில் அனைத்துவிட உடனே மயக்கம் உண்டாகும். தொண்டையில் விசநீரேற்று வையக வாழ்க்கை தப்பிப் போகும்.

இதழ் 3 : குமிழ் போலக்காணும் மூன்றாம் இதழில் மாத்திரை அளவு பதித்து ஏந்த காலுன்றி நடக்க முடியாமலாகும். பேசுவது (நாக்கு) விளங்காது. கண்மேல் நோக்கிச் சொருகிப் போகும். இக்காயத்தால் உறக்கம் உண்டாகும். இறுதியில் கர்ணிக வாதம் வரும்.

இதழ் 4 : நான்காம் இதழ் மருவும் ஓடைக்கும் கீழருகில் உள்ளது. இதில் காலம் ஏற்றால் வெட்டு உண்டாகும். நிச்சயம் சன்னி வரும். அலவு கோணும். கண் மருளும் அலவு ஆடும். சரிவில் பதித்து தாக்க நிலை அயரும். கண்ணும், தள்ளும். பொறிகளெல்லாம் தளரும் சன்னியால் பஞ்ச இதழ் குன்னும். இதழ் நடுவே பிடிக்க கண்டம் குழைந்து போகும். ஒருபுறம் வெட்டுண்டாகும். சோதி ஒளி மயங்கி நாகுழறும்.

இதழ் 5 : ஐந்தாவது இதழில் பிடிக்க சன்னிவெட்டு மாறும். மேற்கண்ட நான்கு இதழ்களினால் உண்டான குற்றங்கள் இளகும். நாடிமுனை இரண்டிற்கும் நடுவில் இருத்தி இளக்கவும், மயக்கவும் செய்யலாம். இருகையின் பெருவிரல் கொண்டு முனைசரிவில் இருத்தித்தாக்க உடனே இருப்பார். எழுந்திருந்து போக முடியாது. வாய் திறந்து பேசமுடியாது என்றாலும் மாண்டுவிடமாட்டார்.

இதழ் 6 : இதழின் நுனியில் தாக்க ஆங்காரமாய் நாக்குத் தள்ளும். கண் காணமுடியாதபடி குன்னியிருப்பார். கால்-கை அசைக்க முடியாது. வாந்தி வரும். அருகு நோக்கி இருத்தித்தள்ள இதைவிட கடினமாக குறிகுணங்களைக் காட்டும். எனவே அருகிநோக்கி தள்ளக்கூடாது. நல்ல ஊட்டச்சதான உணவு கொடுத்தாலும் இந்த பாதிப்பு தீராது. நடுவில் எந்த சுமை பெருகும். சங்குதழையிலிருந்து ஆறு சுவர்போல அறு நரம்புகள் உள்வர்மங்களை தொட்டு நிற்கும். அந்த இடத்தில் பிடிக்கக்கூடாது. பிடித்தால் வாசிக்கு ஊனம் உண்டாகும். வாசிக்குக் குற்றம் உண்டானால் உலக வாழ்க்கை பாழய் போகும். ஆண்மை குறைவு ஏற்படும். நாடிநிலை பிசகி மயக்கம் உண்டாகும். மயக்கம் உண்டாவதற்கு வாசிநிலை தடைபடுதலே மூலக்காரணமாகும்.

இதழ் 7 : இதழ் ஏழின் நுனிநரம்பில் பிடித்திட நாக்குக்குன்னும். கறக்கிவிட நடுக்கம் உண்டாகும். வெட்டு. சன்னி, கபமூர்ச்சை தொந்தமாகும். கீழ்நோக்கியிருந்த ஈரலுக்குள்ளே பரபரப்பும் ஆட்டமு காணும். உடலில் மூன்றாண்டுகள் சுழிலி வந்து தொடுக்கும்.

இதழ் 8 : எட்டாம் தானத்தின் பொய்கையில் 96 தத்துவங்களும் கிடுங்கும். ஒரிரை கீழ் நோக்கியிருத்த மயக்கமுண்டாகும் கண்ணடைக்கும். கறக்கிவிட குலைகள் துள்ளும். சரித்து ஏத்த கழுத்துக் கோணும். கறக்கிக் சரித்துயேத்த கால்களை தூக்கி முன்னே வைக்க முடியாது.

6. ஆக்கினை :

“இன்னுமொறு மனத்திடத்தின் அருமைகேளே

திடமான முக்கோண இதழின் மேலே”

(வ.ஒ.மு.சரசூத்திரம்-535/1200)

இது புருவ மையத்தில் உள்ளது. இதில் முக்கோணமும், அதன் இருபக்கமும் இரு இதழ்களும் இருக்கும். இதில் இரண்டு அட்சரங்கள் இருக்கும். இந்த முக்கோண இதழின் மேலே பிடிக்கும் போது வாய் வழியே சுவாசம் போகும்.

இதழ் 1 : நான்கு நெல்லிடைக்கு வலப்பக்கமுள்ள முதல் இதழில் பிடிக்கும் போது இதழ் வீசி வெளியாகும். மணிக்குடல் பெருகும். மேல்வாசி தடையுண்டாகி மூலவழி சுவாசம் போகும்.

இதழ் 2 : இடப்பாகமுள்ள இரண்டாம் இதழில் பிடிக்க சரீரம் குன்னும். ஆந்தை போல் விழிக்கும். வலி அதிகமாகி மரணமடைவர்.

7. சகஸ்ராரம் :

இது உச்சியில் உள்ளது. இது 1008 இதழ்களையுடையது. மேலும் இது எண்ணிலடங்கா (ஹ) இதழ்களையுடையது என்றும் கூறுவர். இவையெல்லாம் சேர்த்து ஒரே இதழாகக் கொள்ளப்படுகிறது. இதில் ஒரு அட்சரம் உள்ளது. இது உச்சி வர்மத்தின் தலமாகும்

Powered By Indic IME