திருமந்திர யோகம்
திருவம் பலம் ஆகச் சீர்ச்சக்கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத்தஞ்சு ஆக்கித்
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே
(திருமந்திரம்-904)
வாறே சிவாயநம மசிவாயந
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே
(திருமந்திரம்-905)
திருவம்பலச் சக்கரம் அமைத்தலே இங்குக் கூறப்பட்டன. ஆறு கோடுகள் நெடுக்காவும், ஆறுகோடுகள் குறுக்காவும் வரைந்தால் 25 அறைகள் உண்டாகும்.

இதில் ஒவ்வொரு முறையும் முடிவாக வரும் கடைசி எழுத்தை அடுத்த முறை முதலாம் எழுத்தாகக் கொண்டு அமைக்கப்பட்டதை காண்க.
இதை ஏட்டில் எழுதி பழகியபின் மனத் திரையில், மார்பில், புருவ மத்தியில், தலை மேலில் என பல இடங்களில் மனத்தாலே அமைத்துச் சொல்லி பழகவேண்டும்.
இதனால் இறைவன் திருக்கூத்தைக் காணலாம் என்றும் செம்பு பொன்னாவது போல் இந்தப் பிறப்பு முக்தி அடையும் என்றும், உடம்பு பொன்னிறமாகும் என்றும் மக்கள் பேறு உண்டாகும் என்றும் இந்த மந்திர யோகத்திற்கு பலன்கள் கூறப்பட்டுள்ளன.
Leave a Reply